Advertisement

அரிட்டாபட்டிஅதிசயங்கள்...


அரிட்டாபட்டிஅதிசயங்கள்...

மதுரை மாவட்டம் மேலுார் வட்டத்தில் மதுரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதே அரிட்டாபட்டி மலைக் குன்று ஆகும். மதுரைக்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது. இந்த மலையை திருப்பிணையன் மலை என்று சமணக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சமணர் காலக் குகைகள் மற்றும் பாண்டியர் காலக் குடைவரை கோவில்கள் இங்கு அமைந்துள்ளன.

அரிட்டாபட்டி மலையின் குகை தளத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கையும், தீர்த்தங்கரர் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளன. 1300 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டும், பாண்டியன் காலத்து குடை வரைக் கோயில் ஒன்றும் காணப்படுகிறது. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமிர செப்பேடுகளும் இங்கு கிடைத்துள்ளன. சமணர்களுக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உறைவிடம் அமைத்து கொடுத்ததாகவும் இங்குள்ள வரலாற்று ஆதாரங்கள் தெரிவிகின்றன

குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது. இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் நீர்ச்சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச்சுனை நீர் என அழைக்கபடுகிறது.

இந்த இடத்திற்கு போகும் வழியில் கண்மாயில் நீர் இருந்தால் நீரை கடந்து செல்வது சிரமம்.இதன் காரணமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் கண்மாய் வரை வந்துவிட்டு பார்க்கமுடியாத ஏமாற்றத்துடன் செல்வர்.

இந்த பிரச்னையை தீர்க்க கிராம மக்கள் துணையோடு களமிறங்கிய ரமேஷ் என்பவர் தற்போது கரையை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.அவரைப்பற்றி அறிந்து கொள்ள இந்த லிங்கை சொடுக்கவும் http://www.dinamalar.com/news_detail.asp?id=1554800

நம் நாட்டின் பழமையையும் அருமையையும் அறிந்து கொள்ள விரும்புபவர் அனைவரும் காணவேண்டிய இடமே அரிட்டாபட்டி.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  தற்போது கரையை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்..... வசூல்... அப்புறம் குறி சொல்ல ஆளு வரும், ஆட்டோ வரும் கப்புள்ஸ் வருவாங்கோ அப்புறம் அப்புறம்தான் ......இந்த மலைக்கோயில் மட்டுமாவது அப்புடியே விடுங்கய்யா உங்களுக்கு புண்ணியம் ....

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இங்கு இருக்கும் சிவனை வேற்று கிரக மனிதர்கள் தினம் வந்து தரிசிப்பாதாக கேள்வி.வேந்தர் டி வி யிலும் இதை பற்றிய எபிசோட் வந்திருக்கிறது [ மூன்றாவது கண் நிகழ்ச்சியில்]

 • manivannan - chennai,இந்தியா

  அழகாக இருக்கிறது தகவல்களுக்கு நன்றி. இந்த மலை எப்படி தப்பியது ?

 • Akaja - Miniapolis ,யூ.எஸ்.ஏ

  மலையை முழுங்கிறாம காப்பாற்ற உடனே மலை மீது கோயில் கட்டணும்,,,,,

 • JAIRAJ - CHENNAI,இந்தியா

  புகைப்படங்கள் அனைத்துமே அருமை. எல்லாவற்றிலும் சிறந்தது பாறை மலையின் பின்னணி கொண்ட மொட்டைமரத்துடன் கூடிய புகைப்படம். ஒருசிறுவன் அந்த குளத்திற்கருகில் நிற்பது சரியல்ல. இந்த படத்தை பார்க்கும் சிறுவர்கள் அந்த இடத்திற்கு தனியாக செல்லும் வாய்ப்புண்டு. குளிக்கவும் ஆசைப்படுவார்கள். ஆகவே எச்சரிக்கை செய்துவைத்தல் நல்லது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement